பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
05:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவம் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், வரும், 24ல், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், பிரம்மோற்சவம் துவங்குவதாக இருந்தது. இதற்காக, ஒவ்வொரு நாளும் நடக்கும் சுவாமி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை, உபயதாரர்கள் செய்திருந்தனர்.பத்திரிகை அச்சடிக்கப்பட்டு, வினியோகம் செய்யும்போது, கொரோனா பரவல் காரணமாக, கோவில்களில் திருவிழாக்கள் நடத்த, அரசு தடை விதித்துள்ளது. இதனால், கடந்தாண்டை போல், தற்போது, பிரம்மோற்சவ விழா தடை செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, கோவில் செயல் அலுவலர் பூவழகி கூறியதாவது:நடப்பாண்டு, இக்கோவிலில், அரசு உத்தரவுப்படி பிரம்மோற்சவம் நிறுத்தப்பட்டது. பக்தர்கள், அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனினும், வரும், 19ம் தேதி வரை, தினசரி உற்சவர் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் நடந்து வருகிறது. வரும் சனிக்கிழமை காலை கச்சபேஸ்வரர், சுந்தராம்பிகை அம்மபாள் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதியில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.