தேவிபட்டினம்: கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால், தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு ஒரு சில பக்தர்கள் மட்டுமே வந்து சென்றனர்.
தேவிப்பட்டினம் நவபாஷாணத்தில், முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்கள், கடற்கரைகள் உள்ளிட்டவைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்துள்ளன. இதனால் தேவிபட்டினம் நவபாஷாணம் வரும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. நேற்று பகல் நேரத்தில் ஒரு சில பக்தர்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாடுகளின்படி நவபாஷாணம் வந்து சென்றனர். ஆனால் கடலில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.