பதிவு செய்த நாள்
23
ஏப்
2021
10:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் தண்டுமாரியம்மன் திருக்கோயில், 65ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது.
விழா, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, பூச்சாட்டு விழா, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், திருக்கல்யாணம், சக்தி அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, சக்தி கரகம் கோயிலை வந்து அடைதல், அலங்கார பூஜை, பொங்கல், மாவிளக்கு, அக்னி கரகம், பூகம்பம் அகற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மஞ்சள் நீராடுதல் நடந்தது. இன்று வசந்த பூஜையுடன் விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.