பெரியகுளம் : பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமி மற்றும் ஷீரடி சாய்பாபா ஜெயந்தி விழா நடந்தது. காலை 6:30 மணிக்கு ஆரத்தியுடன் பூஜை துவங்கியது. காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர ேஹாமம் உட்பட 5 வகையான ேஹாம பூஜையும், பாபாவிற்கு மஹா அபிஷேகம், மாலையில் கலை நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஆரத்தி, சாவடி ஊர்வலம், இரவு ஆரத்தி நடந்தது. ராஜ அலங்காரத்தில் சாய்பாபா காட்சியளித்தார். பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.