சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதி கோயில்களில் பங்குனி வழிபாடு நடத்தப்பட்டது.
உப்புச்செட்டியார் தெரு காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். கொரோனோ கட்டுப்பாடு விதிகளுடன் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நாடார் பேட்டை பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி வழிபாட்டையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் முளைப்பாரி, பொங்கல் வைத்து வழிபட்டனர். கூத்தாடி அம்மன் கோயிலில் பெண்கள் பூத்தட்டு எடுத்து நேர்த்தி செலுத்தினர்.