ஓடு கொரோனா ஓடு! கொரோனாவை விரட்ட தீப்பந்தத்துடன் ஓடிய கிராம மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2021 05:04
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கொரோனாவை விரட்ட, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நள்ளிரவில் தீப்பந்தம் ஏந்தி ஓடு கொரோனா ஓடு என்று சொல்லியபடி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவத் துவங்கியதில் இருந்து, இதுவரை வேறு எந்த நாட்டிலும் பதிவாகாத வகையில், நம் நாட்டில், நேற்று ஒரே நாளில் புதிதாக, 3.14 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை விரட்ட ம.பி.,யில் நடந்த வினோத சம்பவம் ஒன்று, வைரலாகி உள்ளது. அகர் மல்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா கிராமத்தில், இரவு நேரத்தில் கைகளில் தீப்பந்தத்தை கொளுத்திய படி ஓடு கொரோனா ஓடு என ஹிந்தியில் கத்திக் கொண்டு மக்கள் ஓடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.