பதிவு செய்த நாள்
24
ஏப்
2021
06:04
மேட்டூர்: மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு பக்தர்கள் வர,கோவில் நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த, கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்து, அமாவாசை, யுகாதி பண்டிகைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வர். தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சேலத்தில் இருந்து, மேட்டூர், மாதேஸ்வரன் மலை வழியாக, மைசூருக்கு, 10, கொள்ளேகாலுக்கு, நான்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனாவால், கடந்த, 10 முதல் 13 வரை நடந்த யுகாதி பண்டிகைக்கு, வெளியூர் பக்தர்கள், கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டது. பின், கடந்த, 14 முதல் 21 வரை, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள், மாதேஸ்வரன் மலைக்கு சென்றனர்.தற்போது கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நேற்று முன்தினம் முதல், மே, 5 வரை, வெளியூர் பக்தர்கள், மாதேஸ்வரன் மலைக்கு வரக்கூடாது என, கோவில் நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.