ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்கல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
இதனை முன்னிட்டு இன்று மதியம் 3:30 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளை ராஜா பட்டர் செய்தார். வேதபிரான் சுதர்சன் வேத விண்ணப்பம் செய்தார். பின்னர் ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு. கிளி மற்றும் மங்கல பொருட்கள் ஒரு கூடையில் வைத்து கோயில் உட்பிரகாரம் சுற்றிவந்து, மதுரை அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். ஊரடங்கால் பக்தர்கள் இன்றி இந்நிகழ்ச்சி நடந்தது.