திருப்புல்லாணி: கொரோனா நோய் தொற்றுகளை தடுக்கும் விதமாக கோயில்களில் உள்ளே பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் குறித்த நோட்டீஸ் கோயில் வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில், வராகி அம்மன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் நடை அடைக்கப்பட்ட பெரிய கதவுகளையும், ராஜகோபுரத்தை நோக்கியும் முக கவசம் அணிந்த பக்தர்கள் வணங்கி விட்டு ஊர் திரும்பி செல்கின்றனர். சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.