விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு அஷ்டவராகி கோவிலில், வசந்த பஞ்சமி உற்சவ விழாவையொட்டி சுமங்கலி பூஜை நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஸ்ரீ சுக்த பூஜை, நடந்தது. தொடர்ந்து, நடந்த சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதையடுத்து, பகல் 12:00 மணிக்கு உழவர் பூஜை செய்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மகேஷ்ராம் செய்திருந்தார்.