முனியாண்டி கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2026 11:01
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. குலதெய்வமாக வழிபடுபவர்கள் பல்வேறு இடங்களில் ‘மதுரை முனியாண்டி விலாஸ்’ என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
சுவாமிக்கு முழு உருவ சிலை உள்ளது இங்கு மட்டும்தான். ஒவ்வொரு ஆண்டும் தை 2வது வெள்ளியன்று திருவிழா நடக்கும். 91வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 10 நாட்களுக்கும் மேலாக காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று முன்தினம் காலை பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலையில் நிலை மாலையுடன் தேங்காய், பழம், பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள், 300 கோழிகள் பலியிடப்பட்டு அசைவ பிரியாணி 30க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார் செய்யப்பட்டது.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோயிலில் உள்ள கருப்பசாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது.