புதுச்சேரி: புதுச்சேரி வேதபாரதி சார்பில், நாளை ராதா கல்யாணம் மகோத்சவம் நடக்கிறது.
பாரத பண்பாட்டு அமைப் பான புதுச்சேரி வேதபாரதி சார்பில், லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினத்தில் இருந்து பஜன்மேளா நடைபெற்று வருகிறது.
அதில் இரண்டாம் நாளான நேற்று காலைசங்கர வித்யாலயா மாணவர்களின் மகாமந்தரம்,ஈரோடு மதுசூதன பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், மாலை குத்தாலம் ஜெயராம பக்த பஜன் மண்டலியினரின் நமாசங்கீர்த்தனம், ஆதித்யா ரமேஷ் பாகவதர் குழுவினரின் தியானம் மற்றும் அபங்க திவ்ய நமாசங்கீர்த்தனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மூன்றாம் நாளான இன்று காலை 8:30 மணிக்கு புதுவை யுவ வேதபாரதி குழுவினரின் மகாமந்திரம், 9 மணிக்கு கோவை கவுதம் கண்ணன் பாகவதர் மற்றும் விட்டல் சத்யநாராயணன் பாகவதர் குழுவினரின் அஷ்டபதி, நாமசங்கீர்த்தனம், மாலை 4:30 மணிக்கு உடையாளூர் கல்யாணராமன் குழுவினரின் பூஜை, சம்ப்ரதாய திவ்ய நாம சங்கீர்த்தனம் மற்றும் டோலோத்சவம் நடக்கிறது.
நாளை காலை 7:00 மணிக்கு உஞ்சவ்ருத்தியும், 9 மணிக்கு கடையநல்லுார் ராஜகோபால் பாகவதர் குழு வினரின் ராதாகல்யாணம் மகோத்தவம் மற்றும் ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது.
நிகழ் ச்சி ஏற்பாடுகளை வேதபாரதி தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.