உடன்குடி : உடன்குடி அருகே தாண்டவன்காடு ஆதிநாராயணன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.தாண்டவன்காடு ஆதிநாராயணன் கோயிலில் புதிய கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த ஏப்.23ம் தேதி கும்பாபிஷேக விழா பூஜை துவங்கி தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.கடந்த ஏப்.25ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கடந்த ஏப்.26ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்கி நேற்று (ஜூன் 12ம் தேதி) மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி காலையில் யாகசாலை பூஜையும், பின்னர் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆதிநாராயண சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேக திருப்பணிக்குழு மற்றும் தாண்டவன்காடு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.