துறையூர்: துறையூர் அருகே காளியாம்பட்டியில் மாசி முனீஸ்வரன், பிரத்யங்கரா தேவி கோவிலில் காலை 5 மணிக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இக்கோவிலில் 27 அடி உயரத்தில் முனீஸ்வரன் சிலை, 17 அடி உயரத்தில் பிரத்தியங்கரா தேவி சிலைகள் சுதை சிற்பமாக உள்ளன. இச்சிற்பத்தை பார்த்திபன் ஸ்தபதி செய்துள்ளார். புதிய கற்சிலைகளை ஒக்கரை கதிரேசன் ஸ்தபதி செய்துள்ளார். கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை சேகர் பூசாரி செய்து வருகிறார். கும்பாபிஷேக சர்வசாதகத்தை ஓம்பிரகாஷ் செய்கிறார்.