நோன்பின் மூலம் பல நற்பண்புகள் நம்மை வந்தடைகின்றன. புலனடக்கம் பாலியல் உணர்வு இயற்கையானது என்றாலும் அதில் கட்டுப்பாடு இல்லாவிட்டால் விளைவு மோசமாகி விடும். நோன்பு நாட்களில் மனைவியிடம் கூட நோன்பாளி புலனடக்கத்துடன் இருக்கிறான். அன்புணர்வு உலகம் இயந்திரத்தனமாக மாறி விட்டது. சுயநலத்தால் மனிதர்களிடம் சகிப்புத்தன்மை போய் விட்டது. அனைவரும் சகோதர்களே என்ற அன்புணர்வு நோன்பால் அதிகரிக்கிறது. நாவடக்கம் தவறான பேச்சில் இருந்து ஒருவரைக் காக்கிறது. யாராவது சண்டைக்கு வந்தால் ‘நான் நோன்பாளி’ என மனசாட்சி குரல் எழுப்பி அமைதி காக்கச் செய்கிறது. உடல்நலம் தவறான உணவு முறைகளால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். இதிலிருந்து விடுவித்து நோன்பால் உடல்நிலை சீராகிறது. ‘ஸஹர்’ என்னும் அதிகாலையில் எழுவதால் நுரையீரல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எல்லா உறுப்புகளும் சுறுசுறுப்பாக இயங்கும். உதவும் எண்ணம் ஏழைகளை தேடிச் சென்று உதவி செய்வதை நோன்பு கற்றுக் கொடுக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம் வளரவும், அமைதி தழைக்கவும், சமுதாயநலம் பெருகவும் ரம்ஜான் வழிகாட்டுகிறது.