திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் தியாகராஜப்பெருமானை மகாலட்சுமி வழிபட்டாள். இதனால் இக்கோயிலுக்கு ‘கமலாலயம்’ என்றே பெயர். இக்கோயில் முன்புள்ள குளமும் ‘கமலாலய தீர்த்தம்’ எனப்படுகிறது. ‘கமலம்’ என்பதற்கு ‘தாமரை’ என்பது பொருள். மகாலட்சுமி தாமரையில் வீற்றிருப்பதால் ‘கமலா’ என அழைக்கப்படுகிறாள். திருவாரூர் கோயிலில் கொலு மண்டபத்திற்கு பின்புள்ள கருவறை ‘லட்சுமி வாசம்’ எனப்படுகிறது.