பதிவு செய்த நாள்
17
மே
2021
05:05
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் பகுதியில் கடந்த 2005ல் தஞ்சை தமிழ் பல்கலை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டது. இதில் கல் திட்டை, முதுமக்கள் தாழி, வாள், போர் கருவிகள் பவளம், முத்து போன்றனை கண்டறியப்பட்டது.
இவற்றை அப்போது காட்சிப்படுத்திய தொல்லியல் துறையினர் இன்றும் அருங்காட்சியத்தில் பராமரித்து வருகின்றனர்.அதே சமயம் தாண்டிக்குடி பாலமுருகன் கோயில், எதிரொலி பாறை, சூரிய பாறை, வலாங்குளம்,ஆடலூர், பன்றிமலை, கே.சி.பட்டி, குப்பம்மாள் பட்டியில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்த கல் திட்டைகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் சிலவற்றை மட்டும் தொல்லியல் துறையினர் ஆராய்ந்து அவற்றை பாதுகாக்கும் நோக்கில் அறிவிப்புப் பலகைகளை மட்டும் வைத்ததோடு சரி, இதுவரை பராமரிக்கவில்லை.இதனால் இப்பகுதி சமூக விரோதி களின் கூடாரமாக மாறி புனித சின்னங்கள் பொலிவிழந்து வருகின்றன. இந்த நினைவுச்சின்னங்களை முறையாக பராமரித்தால் மட்டுமே இனிவரும் தலைமுறை யினர் அறிந்து கொள்ள முடியும். கல் திட்டைகளை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும்.