பதிவு செய்த நாள்
25
மே
2021
11:05
திருப்பூர்: தேர்த்திருவிழா ஒத்தி வைக்கப்பட்டாலும், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆகம விதிமுறைப்படி, விேஷச பூஜைகள் நடந்து வருகின்றன.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா விமரிசையாக நடக்கும். முதல்நாள், விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், மறுநாள் வீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடக்கும்.கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஆண்டு தேர்த்திருவிழா நடக்கவில்லை.
இந்தாண்டும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், தேரோட்டம் நடைபெறாது. தேர்த்திருவிழா நடக்காவிட்டாலும், ஆகம விதிமுறைப்படி விழாக்கால பூஜைகளை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, வைகாசி பவுர்ணமி நாளில், விஸ்வேஸ்வர சுவாமி தேர்த்திருவிழா நடக்கும். முந்தைய நாள், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அந்தவகையில், நேற்று விஸ்வேஸ்வரர் பார்வதிதேவி மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று, மூலவருக்கு சிறப்பு அபிேஷகமும், உற்வசமூர்த்திகளுக்கான அலங்கார பூஜைகளும் நடக்க உள்ளன.