முருகனின் வேல் கல்வியின் சின்னமாக விளங்குகிறது. அதன் கூர்மையான நுனிப்பகுதி மாணவர்கள் கூர்மையான அறிவைப் பெற வேண்டும் என்பதையும், அதன் அகன்ற பாகம், பரந்த மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது. அதன் நீண்ட கைப்பிடி நல்ல நுால்களை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. இவ்வாறு கந்தனின் கைவேல், கல்வி வேலாக திகழ்கிறது. இதனால் தான் அவருக்கு ‘ஞானபண்டிதன்’ என்று பெயர் ஏற்பட்டது.