இன்றைய உலகில் இரு மனிதர்களுக்கிடையே பகை ஏற்பட்டு ஒருவனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் இன்னொருவன் மகிழ்கிறான். இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் ஒவ்வொருவரையும் தன் சகோதரனாகவே பார்ப்பான். மற்றவர் துன்பம் கண்டு மகிழ்ச்சியடைய மாட்டான். ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வருவது இயற்கை. அதற்காக மற்றவர் துன்பம் கண்டு கைகொட்டி ஆணவமாகச் சிரிப்பவன், மறு நாளில் இறைவன் முன்னிலையில் தக்க பதில் சொல்ல வேண்டியிருக்கும். கொடிய தண்டனையும் பெற வேண்டியிருக்கும். ‘‘உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியடையாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து துன்பத்தை களைந்து விடுவான். உன்னை துன்பத்தில் ஆழ்த்தி விடுவான்’’ என்கிறார் நாயகம். எனவே பிறர் துன்பத்தைக் கண்டு சிரிக்காமல் முடிந்து அளவு உதவியை செய்வோம்.