* பணம் செலவழியும் முன் மகிழ்வுடன் தர்மம் கொடுக்க விரையுங்கள். * மற்றவர் மீது குறை சொல்பவனே உங்களில் கெட்டவன். * சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள். * வாங்கிய கடனை திருப்பித் தருவதில் விரைந்து கொள்ளுங்கள். * காலம் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள். * பொது இடங்களில், நடைபாதையில் உள்ள நிழல் தரும் மரங்களை அசுத்தம் செய்யாதீர்கள். * சிறுநீர் கழிக்கும் போது பேசாதீர்கள். * கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வதும் தர்மமாகும். * அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர். – பொன்மொழிகள்