பழநி முருகன் கோவில் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2021 11:06
பழநி : பழநி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது, என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம்,பழநி அரசு மருத்துவமனையில், நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்து கூறியதாவது: பழநி முருகன் கோவில் சார்பில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சிலிண்டர்களில் நிரப்பி, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும். முதற்கட்டமாக, திண்டுக்கல் மாவட்ட தேவையை பூர்த்தி செய்ய மையம் அமைக்கப்படுகிறது.அதன்பின், பிற மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் வழங்கும் வகையில் இம்மையம் மேம்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.