நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார்.பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கைலாசநாதர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா கட்டுபாடுகளால் பக்தர்கள் வருகையை தவிர்க்க மாலையில் நடைபெறும் பூஜைகள் காலையிலேயே நடந்தது.