தஞ்சாவூர் : கொரோனா தொடர் சேவையில் ஓர் அங்கமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் உள்ள 100 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துணவு பொருட்களை வினியோகிக்கும் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சேவையை 2.6 .21 புதன்கிழமையன்று மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். கொரோனா தொற்றினால் பல வகையிலும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் இந்தக் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு வேண்டிய 14 வகையான ரூ. 1200/- மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்பட்டது.