பதிவு செய்த நாள்
04
ஜூன்
2021
05:06
சென்னை:தீ விபத்து ஏற்படாமல் இருக்க, அனைத்து கோவில்களிலும், தேவையான தீ தடுப்பு கருவிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என, இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து குறித்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும். கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு, பிராயசித்த பரிகாரம் செய்ய வேண்டும். தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கோவில்களிலும், தீ விபத்து ஏற்படாமல் தடுக்க, தேவையான தீ தடுப்பு கருவிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.தேரோட்டம் நடக்கும் கோவில்களில், திருத்தேர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெட்ட வெளியில் நிற்கும் தேர்களுக்கு கொட்டகை அமைத்து பாதுகாக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றும் பகவதி அம்மன் மீது பக்தி கொண்ட அனைவரும், தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி, கூட்டு வழிபாடு நடத்த வேண்டும்.கோவில்களில், ரசாயன கலப்பு இல்லாத கற்பூரம் ஏற்ற வேண்டும்; இல்லையேல் நெய் தீபம் ஏற்றி, அம்மனுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு ராமரவிக்குமார் தெரிவித்துள்