ராமநாதபுரம் : தமிழகத்தில் பூஜாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளஅனைவருக்கும் கொரோனா கால நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என தமிழ்நாடு இந்து கோயில்கள் பேரவை மாநிலஅமைப்பாளர் கோதாவரி பூஜாரி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அறநிலையத்துறை மூலம் ஒரு கால பூஜை திட்டத்தில் வருமானம் இல்லாத பூஜாரிகளுக்கு அரசு ரூ.4000 கொரோனா நிவாரணம் அறிவித்துள்ளது. இதனைபோல அறநிலையத்துறை நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கிராமகோயில் பூஜாரிகளுக்கு முந்தைய அரசு நிவாரணம் வழங்கியது. ஆகையால் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள பூஜாரிகளுக்கு நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள்தொகுப்பு வழங்க வேண்டும், இவ்வாறு அவர்கூறினார்.