திண்டிவனம் : ஊரடங்கு காரணமாக, அன்னதான திட்டத்தின் கீழ், திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. ஊரடங்கு அமலில் இருப்பதால், கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அன்னதான திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில், அன்னதான திட்டம் செயல்படும் கோவில்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் சாம்பார், தயிர் என கலவை சாதங்களை வழங்க வேண்டும் என இந்து அறநிலையத் துறை அறிவித்திருந்தது. அதன்படி, திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஏழைகளுக்கு நேற்று மதியம் உணவு வழங்கப்பட்டது.