செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடந்தது. இரவு 6:45 மணி முதல் 7:45மணி வரை கோவில் வளாகத்தில் சிவ வாத்தியம், மேள தாளம் முழங்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஊஞ்சலில் அமர்த்தி கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். மகா தீபாராதனைநடந்தது.இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.