பதிவு செய்த நாள்
11
ஜூன்
2021
04:06
பொள்ளாச்சி, உடுமலை கோவில்களில், அமாவாசை தினத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, பூஜை நடந்தது. ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.* உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தை அமாவாசை, ஆடி அமாவாசை உட்பட ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். நேற்று அமாவாசை தினத்தை முன்னிட்டு, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. அனைத்துக் கோவில்களிலும், ஊரடங்கு காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர் -நமது நிருபர் குழு-.