மாண்டியா: மாண்டியா மலவள்ளி அருகே உள்ள சின்னபிள்ளா கொப்பாலு கிராமத்தில் கொ ரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமத்தில் 20 வீதிகள் உள்ளன. வீதிதோறும் கொரோனா தோரணம் கட்டி, திருவிழா போல அலங்கரித்து கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். கிராமத்தினர் மாரியம்மனுக்கு, 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழி பலி கொடுத்தனர். கொரோனாவை விரட்டுமாறு வேண்டி கொண்டனர். இந்த கிராமத்தில் இதற்கு முன் தொற்று நோய் வந்த போதெல்லாம் ஆடு, கோழி பலியிட்டு பூஜை செய்தனர். அதன்பின் தொற்று நோய்கள் விலகியதாக கூறப்படுகிறது. எனவே பெரியவர்களின் ஆலோசனைப்படி கிராமத்தினர் வரி வசூல் செய்து பலி பூஜை நடத்தியுள்ளனர்.