‘‘இரும்பின் மீது தண்ணீர்பட்டால் துருப்பிடித்து விடுகிறது. அதுபோல் கெட்ட எண்ணங்களால் இதயங்களின் மீதும் துருப்பிடித்து விடுகிறது. இதயத்தின் மீதுள்ள துருவை நீக்கும் வழி என்ன..’’ என்று தோழர்கள் நாயகத்திடம் கேட்டனர். ‘‘மரணத்தை நினைவில் நிறுத்துவதும், குர்ஆனை தொடர்ந்து ஓதி வருவதுமே இதயத் துருவைப் போக்கும் வழியாகும்’’ என்றார். ஆம்... சுகபோகமான ஆடம்பர வாழ்வை மனிதர்கள் விரும்புகிறார்கள். இதற்காக எதையும் செய்யத்துணிகிறார்கள். அப்போது, அவர்களின் இதயத்தில் மாசுபடிந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. இதயம் முழுவதும் கெட்ட ரத்தத்தால் நிரப்பப்படுகிறது. இதை மாற்ற மரணமே சிறந்த வழியாகத் தெரிகிறது. அடுத்த நிமிடம் இருப்போமா, மாட்டோமா என்ற வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டால் ஆடம்பரத்துக்காக தீய செயல்களை செய்ய மாட்டோம். இதனால் தவறுகள் குறையும். தவறுகள் குறையும்போது இறைவனுக்கு பிரியமானவராக நாம் மாறிவிடுகிறோம்.