பழநி: பழநி முருகன் கோயிலில் செயல்பட்டு வந்த செயல் அலுவலர் கிராந்தி குமார் பாடி சில நாட்களுக்கு முன் பணி மாற்றம் செய்து அரசு உத்தரவு வெளியானது. இதைத்தொடர்ந்து பழநி கோவில் இணை ஆணையராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் திருப்பூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையராகவும் செயல்படுவார் என அரசு அறிவித்துள்ளது.