மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2021 04:06
மணவாளக்குறிச்சி: அண்மையில் தீ விபத்தில் ருவறை மேற்கூரை சேதமடைந்த மண்டைக்காடு வதியம்மன் கோயிலில் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆய்வு செய்தனர். குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பவதியம்மன் கோயிலில் இந்த 2ம் தேதி கருவறை மேற்கூரையில் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில், தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில், இன்ஜினியர் செல்வன், உதவி அலுவலர் லத்தீஸ் குமார் அடங்கிய குழுவினர் நேற்று மண்டைக்காடு கோயில் பிரகாரம் மற்றும் தீ பிடித்த மேற்கூரை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்பு ஆய்வுக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது: இங்கு ஆய்வு பட்டது. சீரமைப்பு பணியில் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய உபகரணங்களை கையாளும் போது மரபு மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 14ம் தேதிக்குள் ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். திருவிழா போன்ற காலங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கூட்டத்தில் பக்தர்கள் உடனே வெளியேற பாதுகாப்பு வழி ஏற்படுத்த வேண்டும். கோயிலில் தீ அணைப்பு கருவிகள் அமைத்தால் மட்டும் போதாது. தீயை அணைப்பதற்கு கோயில் குருக்கள், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.