சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. 17 நாட்கள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் தினமும் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தீச்சட்டி பால்குடம் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மன் அலங்காரத்தை வடக்கு வாயில் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.