ராமநாதபுரம்: ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாணய அலங்காரத்தில் முருகன், வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் சஷ்டி பூஜை நடந்தது. மூலவர் வழிகாட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.