குற்றாலம்: குற்றாலத்தில் விநாயகர் சிலை திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயிலை சார்ந்த குற்றாலம் தேரடி வீதியில் சிற்றருவி செல்லும் வழியில் விநாயகர் கோயில் உள்ளது. கோயிலின் பூசாரி நேற்று காலை வழக்கம் போல பூஜை செய்ய வந்துள்ளார். கோயிலுக்குள் இருந்த விநாயகர் சிலையை காணாமல் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.