பதிவு செய்த நாள்
18
ஜூன்
2021
02:06
திருநெல்வேலி: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூஜாரிகள் மற்றும் பிறபணியாளர்கள் 338 பேருக்கு உதவித் தொகையாக தலா 4 ஆயிரம்ரூபாய், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளை., ராமசாமி கோயிலில் நடந்தது. நெல்லை மண்டல இணைஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். இந்தஉதவித் தொகை மற்றும் நிவாரணப்பொருட்களை எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன் வழங்கினர். இதில் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை டவுன் நெல்லை டவுன் டிஎம்சி காலனி துாய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் வழங்கினார். இதில் மாவட்ட பொது செயலாளர் கணேசமூர்த்தி, மண்டலதலைவர் ஆனந்தராஜ், நிர்வாகிகள் வக்கீல் பாலாஜி கிருஷ்ணசாமி, வேல் ஆறுமுகம், மகளிரணி மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.