நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதையொட்டி நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். பூஜைகளை குமார் , ஹரிபிரபு குருக்கள் செய்தனர். உற்சவர் புவனாம்பிகை சமேதராய் பூலோகநாதர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். மேலும் கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் , எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இல்லாமல் கோவில் ஊழியர்கள் மட்டும் பூஜையில் கலந்து கொண்டனர்.சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு சொக்கநாதர், மீனாட்சி அம்மன், நந்தி, பிரதோஷ நாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் ஆலய உள்பிரகார உலா நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 4:30 மணிக்கு மேல், நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.