பதிவு செய்த நாள்
23
ஜூன்
2021
09:06
சேலம்: ஆனி பிரதோஷத்தையொட்டி, சேலம், ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாதேஸ்வரன் கோவிலில், பூசாரிகள், சிவாச்சாரியார்கள் நேற்று, நந்தியம்பெருமான், மூலவர் மாதேஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, மலர்மாலைகளால் அலங்கரித்து, கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு பூஜை செய்தனர். அதேபோல், சென்னகிரி வட்டக்காடு மருந்தீசர் கோவிலிலும், பக்தர்கள் யாருமின்றி பிரதோஷ விழா, சிறப்பு அபிஷேகத்துடன் நடந்தது. மேலும், ஆத்தூர் அடுத்த, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், மூலவர், நந்தி தேவருக்கு, 16 வகை அபிஷேக பூஜை நடந்தது. அப்போது, கொரோனா நீங்கவும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மூலவர், நந்தி தேவர் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.