பதிவு செய்த நாள்
25
ஜூன்
2021
09:06
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நேற்று எளிய முறையில் குறைந்த பக்தர்களை கொண்டு எளிமையாக முறையில் நடைபெற்றது.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடக்கிறது.பழங்காலத்தில் சிவபக்தியான புனிதவதியாரை மணந்த பரமதத்தர் வீட்டிற்கு கொடுத்து அனுப்பிய மாங்கனிகள் இரண்டில் ஒன்றை அடியார் வேடத்தில் வீட்டிற்கு வந்த சிவபெருமானுக்கு புனிதவதியார் உணவுடன் சேர்த்து படைத்தார். பின் வீட்டிற்கு வந்த கணவருக்கு மீதமிருந்த மாங்கனி ஒன்றை வழங்க அதன் சுவை அதிகமாக இருந்தால் மற்றொரு பழத்தை கேட்க செய்வதறியாது திகைத்த அம்மையார் இறைவனை வேண்டியதால் கையில் மாங்கனி கிடைத்தது. அதை கணவரிடம் வழங்கினார்.முன்பு சாப்பிட்ட பழத்தின் சுவையை விட அதிகமாக இருந்ததால் பழம் குறித்து பரமதத்தர் விபரம் கேட்டார்.
அப்போது சிவபெருமாள் வழங்கியது என கூற அதை ஏற்க மறுத்த பரதத்தர் மீண்டும் ஒரு பழம் வரவழைத்து கொடு என கேட்டார். அப்போது கணவன் முன் இறைவனை வேண்டி மீண்டும் ஒரு பழத்தை பெற்று கணவனிடம் காண்பித்தார். இதை பார்த்த பரமதத்தர் புனிதவதியார் நீ தெய்வ பிறவி என்று கூறி பிரிந்து மதுரை சென்று மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். கணவனை காண மதுரை சென்ற புனிதவதியாரை கண்ட பரமதத்தர் தனது இரண்டாவது மனைவி மகளுடன் காலில் விழுந்து வணங்கினார்.பின் கணவனுக்காக ஏந்திய உடலை வெறுத்து சிவனிடம் வேண்டி பேய் உருவம் பெற்றார்.அம்மையார் பின் சிவபெருமாள் உள்ள கையிலாயத்திற்கு சென்றார்.புனிதமிக்க கைலாயத்தில் தன் பாதங்கள் படகூடாது என்பதால் தலைகீழாக கைகளால் நடந்து சிவனை அடைந்தார். அப்போது தாயும் தந்தையும் அற்ற சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை அம்மையே அன்று அழைத்தாக வரலாறு இந்த வரலாற்று நிகழ்வை உணர்ந்தும் விதமாக ஆண்டுதொறும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இந்தாண்டு கொரோனா தொற்றால் மாங்கனித்திருவிழா குறைந்த பக்தர்கள் கொண்டு எளிமையான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவின் அடிப்படையில் கோவில் நிர்வாகம் கடந்த 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது.
கடந்த 22ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது.மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும்.நேற்று முன்தினம் பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் நான்கு திசையிலும் வேதபாராயணங்கள் எதிரொளிக்க மேள தாளம் முழுங்க காலை.11.30 மணிக்கு பத்மாசனம் அமர்ந்த விமானத்தில் சிவபெருமான் காவியுடை,ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளினர்.அப்போது சிவபெருமானுக்கு மாங்கனி வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.பின்னர் கோவிலை சுற்றிவந்தார்.அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் உட்பிரகாரத்தில் கலெக்டர் அர்ஜூன்சர்மா மாங்கனி வீசும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் எம்பலம் செல்வம், எம்.எல்.ஏக்கள் நாஜிம், நாகதியாகராஜன், சந்திரப்பிரியங்கா, ஆறுமுகம், சிவசங்கர், பிரமோத்அசோக், ரமேஷ்,அசோக்பாபு, கலெக்டர் அர்ஜூன்சர்மா, துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ்,அறங்காவலர் குழு தலைவர் கேசவன்,துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி,பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.மேலும் நிகழ்ச்சி அனைத்தும் (www.karaikaltemples.com) என்ற சமுக வலைத்தளம் மூலமாக பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.