முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் எல்லா ஜீவராசிகளையும் துன்புறுத்துவதில் மகிழ்ந்தான். அவனும், அவன் சந்ததியினரும் இறந்த பின், ஆவிகளாக அலைந்து துன்புற்றனர். இந்த வம்சத்தில் வந்த பகீரதன் என்பவன், தன் முன்னோர் நிலையறிந்து அவர்களை கரையேற்றும் வழி கூறுமாறு ஒரு முனிவரை வேண்டினான். ஆகாயத்தில் பாயும் கங்கையை பூமிக்கு வரவழைத்து அதைக் கொண்டு பிதுர்கடன் செய்தால் துன்பம் நீங்கும் என வழி காட்டினார் அவர். இது சாதாரண விஷயமா! வலதுகால் கட்டை விரலை மட்டும் பூமியில் ஊன்றி கடும் தவம் செய்தான். தவசக்தியால் கங்கை பூமிக்கு வந்தது. இதனால் தான், விடாமுயற்சியை பகீரத பிரயத்தனம்’ என குறிப்பிடுகிறோம்.