Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகளையில் ஒரே குழியில் 16 தாழிகள் 70 நாட்களுக்கு பின் திருத்தணி கோவிலில் பக்தர்கள் தரிசனம் 70 நாட்களுக்கு பின் திருத்தணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
கோவில்களில் பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2021
06:06

 சென்னை: ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு பின் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பக்தர்கள், பரவசத்துடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


அனுமதி: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்., மாதம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், வழிபாட்டுத்தலங்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


தொற்று பரவல் குறைய ஆரம்பித்த பின், சில மாவட்டங்களில், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பல்வேறு விதிமுறைகளை கோவில் நிர்வாகம் கடைப்பிடிக்க அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, பக்தர்கள் அதிகம் கூடும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சமூக இடைவெளிக்கான தடுப்புகள், மூலவர் தரிசனத்திற்கான வரிசைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் நேற்று, அஸ்திர ஹோமம் நடந்தது.இந்த ஹோமம், மக்களின் பல்வேறு பிரச்னைகள் நீக்கி, சகல விதமான நோய்கள், தோஷத்தையும் போக்கவல்லது.வடபழநி ஆண்டவர்கோவிலில் நேற்று காலை முதல் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நீண்ட வரிசைஅதேபோல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்களிலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில், திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில், சமூக இடைவெளி விட்டு தரிசித்தனர். கோவில் மூலவர் சன்னதியில் பல பக்தர்கள் பக்தி பரவசம், ஆனந்த கண்ணீருடன் கடவுள் நாமம் கூறி தரிசனம் செய்தனர்.108 சங்கநாதம் முழங்க...சென்னையில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 50 நாட்களுக்கு பின் நேற்று 108 சங்கநாதம், சிவ வாத்தியங்கள் முழங்க திறக்கப்பட்டது. அப்போது, சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள், ஒற்றீஸ்வரா; தியாகேசா என, விண்ணதிர முழங்கினார். மேலும், உப கோவில்களான, தட்சிணாமூர்த்தி, அகத்தீஸ்வரர், பொன்னியம்மன், பட்டினத்தார் கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன.திருத்தணியில்...திருத்தணி முருகன் கோவிலில், 70 நாட்களுக்கு பின், நேற்று முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோட்டாட்சியர் மலைக்கோவிலில் நேரில் வந்து ஆய்வு செய்தார்.நேற்று காலை, 6:00 மணி முதல், இரவு, 8:45 மணி வரை முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

முக கவசத்துடன் வந்த பக்தர்களுக்கு சானிடைர் வழங்கி, உடல் வெப்ப பரிசோதனை செய்த பின், தரிசனத்திற்கு அனுமதித்தனர்.அப்போது பக்தர்கள் சமூக விலகலுடன் நின்று தரிசனம் செய்வதற்கு வசதியாக வட்டம் போடப்பட்டு, அதில் பக்தர்கள் நின்றனர்.மனசு லேசானதுகோவில்களில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கூறியதாவது:ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களாக சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.இதனால், நாங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டோம். ஒரு புறம் தொழில், வருமானம், கொரோனா நோயால் சோர்வடைந்து போனாம். சுவாமி தரிசனம் மூலம் மனசு லேசானது. ஒருவித பாசிடிவ் வைப்ரேஷன் தோன்றியுள்ளது. புது நம்பிக்கையும் பிறந்துள்ளது. இனி, உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar