உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் பாறை மேட்டில் பாழடைந்த நிலையில் உள்ள சிவன், பார்வதி கோயிலை சீரமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். பிற்கால பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் தொட்டப்பநாயக்கனூர் அருகே உள்ள பாறைமேட்டில் கருங்கல் திருப்பணியாக சிவன், பார்வதி கோயில் எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில் கோயில் பராமரிப்பு குறைந்து சிதைந்துள்ளது. சுற்றுச்சுவர்களில் சிவனின் பல்வேறு வடிவங்கள், முருகன், விநாயகர், துர்க்கை என சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் உள்ள இந்த கோயிலை கிராம மக்கள், ஊராட்சித் தலைவர் பாலமுருகமகாராஜா, பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி, சோலை ரவிக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அரசுத் துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் கோயிலை சீரமைக்க முயற்சி மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.