காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வெளியூர் பக்தர்கள் வருகையால் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டில் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மேலும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ளுவது வழக்கம்.
தற்போது கொரோனா நோய் தொற்றி காரணமாக குறைவான பக்தர்கள் மட்டும் பகவானை தரிசனம் மேற்கொண்டனர்.மேலும் தமிழகத்தில் சில தளர்வுகள் தளர்த்தியால் இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. இதனால் பல மாதங்களுக்கு பின் இன்று சனிக்கிழமை என்பதால் வெளியூர் பக்தர்கள் பலர் சனிஸ்வபகவானை தரிசனம் செய்தனர்.முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்களை வெப்பபரிசோதனை மேற்கொண்டப்பின்னர் கோவில் நிர்வாகம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளித்தனர்.மேலும் கோவில் நிர்வாகம் 7அறை சனி உள்ளிட்ட பல்வேறு பரிகரத்திற்கு மகாஹோமங்கள்.அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைக்கு அனுமதிக்கவில்லை மேலும் பக்தர்கள் எள்ளூதீபம் ஏற்றுவதற்கு அனுமதி இல்லை இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் சில ஏமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் பக்தர்கள் பரிகாரங்கள் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் பலர் கூறுகின்றனர். வெகு நாட்களுக்கு பிறகு அதிக அளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சனீஸ்வர பகவானின் தீர்த்தக்குளமான நளன் தீர்த்த குளத்தில் குளிப்பதற்கு பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாதங்களுக்குப் பின் திருநள்ளாற்றில் பக்தர்கள் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.