“நற்குணமுள்ள பெண்ணே சிறந்த பொக்கிஷம். அவள் கணவரின் குறிப்பறிந்து நடப்பாள். கணவரின் அன்புக்கட்டளைகளை ஏற்பாள். அவளை விட்டுச் சென்று விட்டாலும் அவரை பாதுகாப்பாள்’’ இதன் பொருள் என்ன? கஷ்டமான குடும்பச் சூழ்நிலையிலும் இன்முகத்துடன் பெண் செயல்பட்டால் வெளியே செல்லும் கணவர் வெற்றிச் செய்தியுடன் திரும்புவார். கணவரின் கட்டளைகளை ஏற்று பின்பற்றுவது அடிமைத்தனம் அல்ல. இதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். ஒருவேளை கணவரின் முடிவு துன்பத்தை ஏற்படுத்தும் என்றால் நேரம் பார்த்து எடுத்துச் சொல்லி உண்மையைப் புரிய வைப்பவளே சிறந்த பெண். ‘விட்டுச் சென்று விட்டாலும் அவரைப் பாதுகாப்பாள்” என்பதிலுள்ள ‘அவரை’ என்பதற்கு பொருள் புரியாமல் இருக்கலாம். கணவர் இல்லாத நேரத்தில் ‘அவருக்காகவே நான் இருக்கிறேன்’ என கற்புநெறியை பாதுகாப்பாள் என்பது இதன் பொருள்.