கொந்தகையில் எலும்பு கூடுகளை வெளியே எடுக்கும் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2021 03:07
திருப்புவனம் -கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளை வெளியே எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
கொந்தகையில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு அதில் 13 முதுமக்கள் தாழிகளும் சமதளத்தில் புதைக்கப்பட்ட ஏழு எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன. இதில் கடந்த மாதம் ஒரு எலும்பு கூடு வெளியே எடுக்கப்பட்டது. மீதமுள்ள எலும்பு கூடுகளை வெளியே கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. தொல்லியல் இணை இயக்குனர் பாஸ்கரன் தலைமையிலான குழு எலும்பு கூடுகளை ஆய்வு செய்து வருகிறது.
தமிழக அரசு ஆய்வு கூட மாணவர்கள் கல்லுாரிகளுக்கு செல்லலாம் என தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை அழகப்பா பல்கலை கழக மரபணு பிரிவும் கொந்தகையில் ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 25 எலும்பு கூடுகள் வெளியே எடுக்கப்பட்டன. ஏழாம் கட்ட அகழாய்வில் 10 மீட்டர் நீளம்,அகலமுள்ள ஒரே குழியில் ஏழு எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.