Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பலிபர்த்ரு பிரதிஷ்டை
படலம் 53: பலிபர்த்ரு பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
03:06

53வது படலத்தில் பலிபர்த்ரு பிரதிஷ்டைமுறை கூறப்படுகிறது. அதன் லக்ஷணம் நித்யோத்ஸவபடலத்தில் கூறப்பட்டுள்ளது. முன்பு கூறப்பட்டுள்ள நல்ல காலத்தில் அங்குரார்பணம், ரக்ஷõபந்தனம், பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம், ஜலாதி வாசம் வரையிலான செய்யவேண்டிய கிரியைகளை முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வேதிகை குண்டத்துடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிரதான குண்டம் விருத்தம் என கூறப்படுகிறது. பிறகு சில்பியை திருப்திசெய்து பிராம்மணபோஜனம், புண்யாஹப்ரோக்ஷணம் வாஸ்து ஹோமம் வரையிலான கர்மாக்கள் செய்யவும் என கர்மாக்களின் வரிசை கூறப்படுகிறது, பிறகு ஜலாதி வாசத்திலிருந்து பிரதிமையை எடுத்து மண் முதலியவைகளால் பிம்ப சுத்தி செய்து சந்தனாதிகளால் பூஜித்து ரக்ஷõபந்தனம் செய்யவும். பிறகு மண்டபத்தில் வேதிகைகள் ஸ்தண்டில பூர்வமாக சயனம் அமைத்து அங்கு பிம்பத்தை சிவப்பு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு சயனாதிவாசம் செய்யவும் என அந்த அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவ கும்பத்தை பிம்பத்தின் சிரோபாகத்தில் ஸ்தாபிக்கவும். அதை சுற்றிலும் வஸ்திரங்களோடு கூடின எட்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும் என கும்ப அதிவாச முறை கூறப்பட்டு சிவ கும்பத்தில் பாசு பதாஸ்திரத்தை பூஜிக்கவும் என கூறி பாசுபதாஸ்திர மந்திரம் கூறப்படுகிறது. பிறகு அந்த கும்பங்களைச் சுற்றிலும் உள்ள எட்டு கும்பங்களில் வஜ்ரம் முதலான ஆயுதங்களை முறைப்படி பூஜிக்கவும் என கூறப்படுகிறது. தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாச பூஜையும் கூறப்படுகிறது. பிறகு குண்ட அக்னி சமஸ்காரம் செய்து சிவாக்னியை பூஜிக்கவும் என ஹோமம் செய்யும் முறையும் திரவ்ய நிரூபணமும் முறைப்படி கூறப்படுகிறது. பிறகு இரண்டாவது நாள் யஜமானன் ஆசார்யன் முதலானவர்களை பூஜித்து தட்சிணை கொடுக்கவும். தட்சிணை பெற்றுக் கொண்ட ஆசார்யன் ஸ்வாமி, கும்பஅக்னியை முறைப்படி பூஜித்து பிம்பத்திற்கு முன்பாதி கும்பங்களை ஸ்தாபித்து மந்திரந் நியாசம் செய்யவும் என்று மந்திர நியாஸ முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை ஸ்நபனம் உத்ஸவம் அதிகமான நைவேத்யம் செய்ய வேண்டுமா இல்லையா என விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு கூறப்படாததை சாமான்யபிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள படிசெய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டை முறை சுருக்கமாக கூறப்பட்டு முடிவில் யார் இவ்வாறு அஸ்த்ர பிரதிஷ்டை செய்கிறானோ அவன் இந்தலோகத்தில் சுகத்தையும் மேல்உலகத்தில் மோட்சத்தையும் அடைகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறு 53வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்!

1. பலிபோடுவதற்கு எடுத்துச்செல்லும் மூர்த்தமான பலி பர்த்ருவின் பிரதிஷ்டையை கூறுகிறேன். சந்திரசேகரப்ரதிஷ்டையில் கூறியுள்ளபடி சூத்ரமிடும் முறை நித்யோத்ஸவத்தில் கூறப்பட்டுள்ளது.

2. பிராயச்சித்தங்களிலோ ஸகவிதமான கார்ய ஸித்திக்காகவோ நித்யோத்ஸவத்திலும், விசேஷமான அதன் மந்திரங்களையும்

3. ஹே மூனீஸ்வரர்களே, சுருக்கமாக பிரதிஷ்டையை கூறுகிறேன். காலத்திலே அங்குரார்பணம், ரத்னநியாஸம், கண் திறப்பது முதலியன செய்து

4. வாஸ்து சாந்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் முன்னால் சொல்லப்பட்டிருப்பதால் அவை அனைத்தும் செய்ய வேண்டும்.

5. மண்டபம் நிர்மாணம் செய்து அதில் ஒன்று, ஐந்து, ஒன்பது குண்டங்களும், குண்டங்கள் வட்டவடிவம், சதுரம், எண்கோணமோ செய்ய வேண்டும்.

6. அந்த மூன்று பக்ஷங்களிலும் பிரதான குண்டம் வட்டவடிவமே. பிறகு சில்பிகளை போகச் சொல்லிவிட்டு, பிராம்ணர்களை போஜனம் செய்விக்க வேண்டும்.

7. புண்யாகவாசனம் செய்து பிரோக்ஷித்து வாஸ்த்து ஹோமத்தை செய்ய வேண்டும். ஜலத்திலிருந்து பிம்பத்தை எடுத்து ஐந்து மண்ணினால் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

8. சந்தனம் முதலியவைகளால் பூஜித்து, ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். வேதிகையில் ஸ்தண்டிலத்தோடு கூடிய சயனத்தை செய்ய வேண்டும்.

9. சிவப்பு நிறமான வஸ்திரங்களோடு, கூடின தேவனை சயனத்தில் படுக்க வேண்டும் முன் போல் சுற்றிலும் சிவ கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

10. தலை பாகத்தில் சிறந்த வஸ்திரத்தை உடையவரும், எல்லா கும்பங்களும், வஸ்திரங்களோடு கூடியதாகவும் அமைத்து சிவ கும்பத்தில் பாசுபதாஸ்திரத்தை பூஜிக்க வேண்டும்.

11. அந்த லக்ஷணத்துடன் கூடிய ரூபத்தை தியானித்து சந்தனம் முதலியவைகளால் பூஜித்து, நான்காவது வேற்றுமையோடு ஹூம்பட் என்ற பெயர்களோடு கூடின மந்திரத்தினால்

12. ஓம் சிலீம், பம், சும், பண்ண ம என்றும் மந்திரத்தினால் பூர்த்தியான தேவனை பாசுபதாஸ்திரம் என கூறப்படுகிறது.

13. அகாரம் முதல் அவுகாரம் முடிய எழுத்துக்கள், ஸத்யோஜாதாதி மந்திரங்கள் முதல் பட் முடிய மந்திரங்கள் ஹ்ருதயாதி மந்திரங்கள்

14. மந்திரத்தினால், முறைப்படி ஓம்காராதி ஹ்ருதய மந்திரங்கள் வேறுபடுகின்றன. ஹ்ருதயாதிகளோடு கூடிய ஹூம்பட் கடையாகவும் நம என்ற பதத்தை கடைசியாகவும்

15. ஹ்ருதய மந்திரத்தினால் வித்யாதேகத்தினாலும் ஹும்காரத்தை கல்பிப்பதனால் ஹ்ருதய மந்திரத்தை சேர்ப்பதினாலும்

16. வஜ்ரம் முதலிய எட்டு ஆயுதங்களையும் குருவானவர் சுற்றிலும் பூஜிக்க வேண்டும். தத்வதத்வேஸ்வரர்களையும் நியாஸம் செய்து முன்போல் மூர்த்திகளையும் நியாஸம் செய்ய வேண்டும்.

17. புத்திமானானவன் மூர்த்தீஸ்வரர்களையும் நியசித்து வஜ்ராதிகளையும் நியாசம் செய்ய வேண்டும். குண்டங்களில் ஸம்ஸ்காரத்தை செய்து சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

18. சமித்து, நெய், அன்னம், ஓஷதிவர்க்கங்களும் எள், பொறி இவைகளோடு கூடியதாக முன்பு சொல்லப்பட்ட மூலமந்திரம் ப்ருமாங்க மந்திரங்களினால் முன்பு கூறப்பட்ட எண்ணிக்கை

19. மூர்த்தி மூர்த்தீஸ்வரரால் ப்ரும்மாங்க மந்திரங்களோடு கூட ஹோமம் செய்ய வேண்டும். புரசு, அத்தி, ஆல், இந்திராதி திக்குகளிலும்

20. வன்னி, கருங்காலி, வில்வம், பிப்பல, சமித்துக்கள், அக்னியாதி திக்குகளிலும் பிரதான குண்டத்தில் இரண்டாவதாக, புரசு சமித்தினால் ஹோமம் செய்ய வேண்டும்.

21. பிறகு தேசிகர்களை பூஜித்து தட்சிணைகள் கொடுக்க வேண்டும். பிம்பத்தினுடைய முன்னிலையில் குடங்களை வைத்து அந்த கும்பங்களிலிருந்து மந்திரத்தை ஹ்ருதயத்தில்

22. நியசிக்க வேண்டும், பத்ம பீடத்தில் பரிவார மந்திரங்களை நியசிக்க வேண்டும், ஸ்நபனம், உத்ஸவம், விசேஷ நைவேத்யங்கள் செய்ய வேண்டும் செய்யாமலும் கூட பூஜித்து வரலாம்.

23. இங்கு கூறப்படாததை சாதாரணமாக பிரதிஷ்டையை போல் செய்ய வேண்டும். இது மாதிரியாக அஸ்த்ரப்பிரதிஷ்டையை எவன் செய்கிறானோ

24. அவன் இந்த லோகத்தில் சுகத்தை அடைவான். பரலோகத்தில் மோக்ஷத்தை அடைவான்.

இவ்வாறாக உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பலிபர்துரு பிரதிஷ்டா முறையாகிற ஐம்பத்தி மூன்றாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar