உத்தரகோசமங்கை : ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு உத்தரகோசமங்கை மங்களநாதர்சுவாமி கோயிலில் மூலவர், நந்தி பகவானுக்கும் 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பிரதோஷ பாடல்கள் பாடி நெய் விளக்கு ஏற்றினர்.
சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலிலும், டி.எம்.கோட்டை செஞ்சடை நாதர் கோயில், சாயல்குடி கைலாசநாதர் கோயில், கீழக்கரை நாராயணசாமி கோயிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கும், கீழக்கரை சொக்கநாதர் கோயிலிலும், ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள சங்கரன் சன்னதியிலும், திருப்புல்லாணி கைலாசநாதர் கோயிலிலும் பிரதோஷ வழிபாடுகள் நடந்தது. பல நாட்களுக்கு பிறகு கோயில் நடை திறந்து பிரதோஷ வழிபாடு நடப்பதால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.