புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மூங்கிதாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 48. இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். இந்த பசு, நான்கு காளைக்கன்றுகள், ஒரு பசுங்கன்று ஈன்றது.பசுங்கன்றுக்கு ஐஸ்வர்யா என பெயரிட்டுள்ளனர். ஐஸ்வர்யா, தற்போது ஒன்பது மாத சினையாக உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், அண்ணாமலை குடும்பத்தார் அதற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து, உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.நேற்று முன்தினம் கோவிலில் வைத்து பசுவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பட்டுத் துண்டு கட்டி, சுமங்கலிப் பெண்கள் வளையல்களை கொம்பில் மாட்டி வளைகாப்பு நடத்தினர்.