பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், ரதசப்தமியையொட்டி, சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் ரதசப்தமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6:00 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகையம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணிக்கு ருத்ராபிேஷகம், அஸ்தர ஜபம் நடந்தது.
காலை 8:00 மணிக்கு சூரிய பகவானுக்கு, தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வந்த தீர்த்தம் மற்றும் பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரானை நடந்தது. சந்திரசேகரர், மனோன்மணியம்மன், அஸ்தரதேவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.